Random image

ஓரினச்சேர்க்கை என்பது மரபணு குறைபாடு; தீர்ப்பினால் எச்ஐவி அதிகரிக்கும்! சுப்பிரமணியசாமி

டில்லி:

நாட்டில் ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்று உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற தீர்ப்பால் ஹெச்ஐவி அதிகரிக்கும் என்றும், அது மரபணு குறைபாடு என்றும்  கூறி உள்ளார்.

ஓரினசேர்க்கை குற்றம் என்ற சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் வரவேற்று ஆடிப்பாடி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

தன்பாலின சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பால் ஹெச்ஐவி பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கை என்பது மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது என்றும், இiத சாதாரண பாலியல் நடத்தை மூலம் சமன் செய்ய முடியாது.

ஓரினச்சேர்க்கை காரணமாக  பெடோபிலியா மற்றும் எச்.ஐ.வி. போன்ற நோய்களை அதிகரிக்கச் செய்யும் என்றும்  ரினச்சேர்க்கை உடைய பல நீதிபதிகள் எனக்குத் தெரியும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், உச்சநீதி மன்றம் விலங்குகளுடனான உறவை குறித்த பிரிவை நீக்க மறுத்துவிட்டது. இது அடிப்படை உரிமைகளுடன் குறுக்கிடாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.