தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுனர் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுனர் 

சென்னை: 
பேட்டரியால் இயக்கப்படும் வாகனத்தின் ஓட்டுநர் மூர்த்தி மைலாப்பூரில் வசிப்பவர்களின் பாராட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.
மயிலாப்பூரை சேர்ந்த ஓட்டுநரான, 48 வயது மூர்த்தி நேற்று கழிவுகளை பிரித்தெடுக்கும் போது 15,000 மதிப்புடைய வெளிநாட்டு நாணயங்களை திரும்ப கொடுத்ததால் அவர் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர் நடராஜனிடமிருந்து பரிசு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர் நேர்மைக்காக கிடைத்த பரிசாக மயிலாப்பூர் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர், இதைப்பற்றி மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: கடந்த மூன்று மாதமாக நான் இங்கு பணிபுரிந்து வருகிறேன் இதற்கு முன் நான் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக இருந்தேன், கண்ணகி நகரில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய மேற்பார்வையாளர் கே செல்வத்தின் அறிவுரைப்படி நான் ஞாயிற்றுக்கிழமை, அருண்டேல் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் மேரி சித்ரா என்பவர் குப்பைகளை ஒப்படைத்தார், அந்த குப்பைகளை பிரித்தெடுக்கும் போது அதில் ஒரு சிறு பெட்டியில் வெளிநாட்டு நாணயங்களும் இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களும் இருந்தன, நான் இதை என்னுடைய மேற்பார்வையாளர் செல்வத்திடம் தெரிவித்து விட்டு அதை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி பேசிய மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர் நடராஜன் தெரிவித்துள்ளதாவது: ஏழை எளிய மக்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருக்கின்றனர், இதுதான் நம் நாட்டின் பலம் என்று தெரிவித்துள்ளார்.