மக்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: 60 பேர் காயம்

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அருளாளன் பகுதியில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அகற்றும் பணிகளை அப்பகுதியினர் மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேன் கூட்டிலிருந்து பாய்ந்து வந்த தேனிக்கள் கொட்டியதில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த நபர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டுவந்து சேர்த்தனர்.