பயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை

டெல்லி: ஏர் இந்தியா விமானங்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை ஹாங்காங் தடை செய்துள்ளது.

பயணிகளுக்கு கொரோனா உறுதியானதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்து உள்ளதாக ஹாங்காங் அரசு கூறி உள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை-ஹாங்காங் விமானத்தில் பயணித்த சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நவம்பர் 10ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதிப்பது இது 4வது முறையாகும்.