ஹாங்காங்கில் பதற்றம்: விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை

ஹாங்காங்:

சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக ஹாங்காவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

ஏற்கனவே நிதி மையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட நிலையில், நேற்று  நகர விமான நிலையம் செல்லும்  போக்குவரத்தை முடக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து போர்களமாக மாறி உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள். சாலைதடுப்புகளை சேதப்படுத்தியும், விமான நிலையத்தின் கண்ணாடிகளை உடைத்தும், விமான நிலையம் அருகே இருந்த எம்டிஆர் ரயில் நிலையத்திற்குள் புகுந்து வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். டிக்கெட் எந்திரங்கள், கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்களை, மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர். பல இடங்களில் காவல்துறையினர் மீது  கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் , ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்  கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறை போராட்டம் காரணமாக, ஹாங்கில் நேற்று, விமான நிலையம் செல்வதற்கான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில் சாலைகளும் மூடப்பட்டதால் விமான பயணிகள் நடந்தே விமான நிலையம் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர். மேலும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.