டில்லி.

லைநகர் டில்லியில் தொழில்சார்ந்த  போட்டோகிராபர் ஒருவர் பட்டப்பகலில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பட்டப்பகலிலேயே இந்த ஆணவக் கொலை பெண்ணின் குடும்பத்தாரால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள கயாலா பகுதியில் வசித்து வரும் பிரபல தொழில்முறை போட்டோ கிராபரான 23 வயது இளைஞர், தனது வீட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டின்  இளம்பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இதன்காரணமாக இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இவர்களின் காதல் இளம்பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்காதல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று, பெண்ணின் தந்தை, அந்த இளைஞரின் தனது பெண்ணை விட்டு விலகி செல்லுமாறு எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது.

இதையறிந்த அந்த இளைஞரின் தாய், தனது மகனை கண்டித்துவிட்டு, இதன் காரணமாக தான் தற்கொலை செய்துகொள்வதாக கூறி வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்த நேரத்தில் இளைஞரின் தந்தையும்  வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் இளைஞருக்கும், பெண்ணின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் முற்றி,  பெண்ணின் தந்தை, தாய் , மாமன் மற்றும் தம்பி ஆகியோர் அந்த இளைஞரை பிடித்துக்கொள்ள ஒருவர் இளைஞரின் கழுத்தில் அடித்துள்ளார்.

இதனால் சுருண்டு விழுந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனே   மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், அவர் உயிர்  ஏற்கனவே  பிரிந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறி உள்ளனர்.

இதையறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரிட்ம், அந்த பகுதி மக்கள் பிடித்து வைத்திருந்த  பெண்ணின் மாமாவை போலீசில் ஒப்படைத்தனர். மேலும்,  இந்த கொலை காரணமாக பெண்ணின்  தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டதாகவும், அன்று மாலை அந்த பெண்ணின் தம்பியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், இதுவே தற்போது ஆணவக்கொலையில் முடிந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்த போட்டோகிராபரான  இளைஞரின் பெற்றோர்கள் வயதானவர்கள் மற்றும் நோயாளிகளாக இருப்பதால், இதுகுறித்து எந்தவித புகாரும் தரவில்லை என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக மேலும் ஏதேனும் பிரச்சினை எழாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.