ராஜ்நாத்சிங் தவிர்த்த நிலையில், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தம்! எஸ்ஆர்எம்

சென்னை:

திரைப்பட பாடலாசிரியர்  வைரமுத்துக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தி ருந்த நிலையில், அவர் நிக்ழச்சியை  தவிர்த்ததால், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும், வைரமுத்துவுக்கு சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதார் என அறிவிப்பு சமீபத்தில் வெளி யாகியிருந்தது.

இதற்கிடையில், ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்து குறித்து சின்மயி உள்பட பாஜக தலைவர்கள்  ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் நினைவுபடுத்தியதாகவும், எனவே அவர் வைரமுத்துக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆனால், ராஜ்நாத் சிங் வருகை தராவிட்டாலும், குறிப்பிட்ட தேதியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், வேறு சில சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து கூறிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகம், ராஜ்நாத்சிங் விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ரத்து செய்ததற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்தவர்,  மற்றொரு அவசர வேலை காரணமாக தனத பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வைரமுத்துவுக்கு  டாக்டர் பட்டம் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்ததுடன், இன்று, நடைபெறும் வழக்கமான நிகழ்வில்  எய்ம்ஸ் தலைவர் மங்களகிரி முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி