ஜனவரி 2015-ல் ஆரம்பிக்கப்பட்ட ஹூக் ஸ்ட்ரீமிங், சிங்டெல், சோனி பிக்சர்ஸ் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி. 2018-ஆம் ஆண்டு, டிஸ்னியின் ஹாட்ஸ்டாருடன், அதன் ஹாலிவுட் தயாரிப்புகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான, பல மில்லியன் டாலர் மதிப்பிலான 4 வருட ஒப்பந்தத்தைப் போட்டது.
தற்போது நிறுவனம் திவால் ஆனதால் இந்த ஒப்பந்தமும் ரத்தாகியுள்ளது.
ஹூக் நிறுவனம் தானாகவே முன்வந்து திவால் அறிக்கையை சிங்கப்பூரில் தாக்கல் செய்தது.
“கடந்த ஐந்து வருடங்களாக, உங்களுக்கு நாங்கள் நம்ப முடியாத ஆச்சரியங்கள், மனதைப் பிசையும் கதைகள், வயிறு குலுங்கும் சிரிப்பு, அட்டகாசமான ஆக்‌ஷன் ஆகியவற்றைத் தந்துள்ளோம். இங்கிருந்து ஹாலிவுட் வரை உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவரையும் நினைத்து எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிறைந்துள்ளது” என்று தளத்தில் ஹூக் பகிர்ந்துள்ளது.
ஏற்கனவே பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்விக்கு, “துரதிர்ஷ்டவ்சமாக, ஹூக் திவாலாகிவிட்டது. எனவே பணத்தைத் திரும்பக் கொடுக்க இயலாது” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.