புதுடெல்லி:
ராமர் கோவில் பூமி பூஜை இந்தியாவில் தேச ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கு ஒரு அடையாளமாக திகழும் என்று நான் நம்புகிறேன் என்று ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அதைப் பற்றி பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளதாவது: கடவுள் ராமர் ஒவ்வொரு இந்தியரின் அங்கமாகவும் உள்ளார். மேலும் ராமர் கோவில் பூமி பூஜை இந்தியாவில் தேச ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கு ஒரு அடையாளமாக திகழும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்திருப்பது ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவை காண்பிக்கும் விதமாக அமைந்துள்ளது.
தன்னுடைய அறிக்கையில் இதைப்பற்றி பிரியங்கா காந்தி வற்றா தெரிவித்துள்ளதாவது:  கடவுள் ராமர் பல வருடங்களாக இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமாக விளங்கியுள்ளார். அவர் எல்லோருக்கும் சொந்தமானவர் எல்லோருக்கும் நலன் வழங்குபவர் அதனால்தான் இவர் மரியாதை புருசோத்தமன் என்று அழைக்கப்பட்டார். ராமாயணம் உலக நாகரிகத்தின் அழியாத ஒரு குறியாக உள்ளது.
பல காங்கிரஸ் உறுப்பினர்கள் ராமர் கோவிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியில் மூத்தவரான கமல்நாத் கடந்த வாரம் மத்திய பிரதேச காங்கிரஸ் ராமர் கோவில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கற்களை வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகல், ராய்ப்பூரில் ராமர் மற்றும் அவரது தாய் கோசலைக்கு மாபெரும் கோவில் கட்ட அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
பிரியங்கா காந்தி வத்ராவின் இந்த அறிக்கை கடவுள் ராமரின் நீதி மற்றும் தியாகத்தை உணர்த்துவது மட்டுமல்லாமல், சாதி மற்றும் மதத்தை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் விதமாக அமைந்துள்ளது.