புதுடெல்லி:

த்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி  விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக காங்கிரசில் கிளர்ச்சி வெடித்துள்ளது. அவரது அமைச்சரவையில் உள்ள ஆறு அமைச்சர்கள் உட்பட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு வந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் மத்திய பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய பிரதேச அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன். தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய பிரதேசத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச அரசியலில் குழப்ப நிலவி வரும் நிலையில், முன்னாள் குணா பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு நெருக்கமான பல எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு சென்று திரும்பியதை அடுத்தே சச்சின் பைலட் மேற்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கூடுதலாக ஜோதிராதித்யா சிந்தியா, டெல்லியில் சச்சின் பைலட்டை சந்தித்து பேசினார்.

மத்திய பிரதேசத்தில் 15 மாதமாக ஆட்சியில் இருந்து வரும் கம்ல் நாத் தலைமையிலான அரசு, ஆட்சியை காப்பற்றி கொள்ள கடைசி கட்டமாக அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மத்திய பிரதேசட்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசில் இடம் பெற்றிருந்த சில எம்எல்ஏ-கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேர் டெல்லியில் இருந்து மூன்று விமானங்கள் மூலம் பெங்களூரு சென்றடைந்தனர். இதில் சிலர் சிந்தியாவுக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி விமான நிலைய தகவலின் படி, காங்கிரஸ் அமைச்சர் துளசி சிலவத்தின் மகன் பாங்கிம் சிலாவத் மற்றும் சிந்தியாவின் நெருங்கிய உதவியாளர் புருஷோத்தம் பராஷர் உட்பட சுமார் 10 பேர் டெல்லியில் இருந்த்து பெங்களூருக்கு பால்கான் 2000 விமானத்தில் பயணம் செய்தனர்.

தற்போது வெளியான தகவலின் படி, இந்த விமானம் காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி 10.20 மணிக்கு பெங்களூருக்கு சென்றடைந்தனர். இந்த விமானத்தில் யார் யார் பயணம் செய்தார்கள் என்ற தகவலை அளிக்க விமான நிறுவனம் மறுத்து விட்டது.

இரு நெருங்கிய சிந்தியா கூட்டாளிகளைத் தவிர, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்யவர்தன் சிங், பிரதுமன் சிங் தோமர், கிரிராஜ், ரக்ஷா சினோரியா, ஜஸ்வந்த் ஜாதவ், சுரேஷ் தக்காட், ஜஜ்பால் சிங் மற்றும் பிரிஜேந்திர யாதவ் ஆகியோரும் பெங்களூர் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.