வனப்பகுதியில் காணாமல் போன விவசாயியை கண்டுப்பிடித்த ஹூப்பர்(நாய்)

நீலகிரி அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன விவசாயியை ஹூப்பர் என்ற நாய் கண்டுப்பிடித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை 48 வயதான ராதாகிருஷ்ணன் காணாமல் போனதாக உறாவினர்கள் புகார் அளித்தனர். ராதாகிருஷ்ணனை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சிலர் கடத்தி இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகப்பட்டனர். போலீசார் இரண்டு நாட்களாக ராதாகிருஷ்ணனை தேடிய நிலையில் சோர்வு அடைந்தனர்.
hoper
இந்நிலையில் என்ன செய்வது என்று யோசித்த நிலையில் வனத்துறையினருடன் பணிபுரியும் ஹூப்பர்(நாய்) அவர்களுக்கு நினைவு வந்தது. அடுத்த சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு ஹூப்பர் கொண்டு வரப்பட்டது. ராதாகிருஷ்ணன் வனப்பகுதி வழியாக சென்றதாக அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்தனர். ராதாகிருஷ்ணனின் ஆடைகளை மோப்பம் பிடித்த ஹூப்பர் காட்டிற்குள் சென்றது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்ற ஹூப்பர் ஐந்து மணி நேர தேடலுக்கு பிறகு ராதாகிருஷ்ணனை கண்டுப்பிடித்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் உறவினர்கள் ஹூப்பருக்கு நன்றியை தெரிவித்தனர்.
hopera
ராதாகிருஷ்ணனனை கண்டுபிடித்தது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ காணாமல் போன முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ஐந்து மணி நேர தேடலுக்கு பிறகு அவரை ஹூப்பர் கண்டுப்பிடித்தது. ஹூப்பர் உதவவில்லை எனில் ராதாகிருஷ்ணன் உயிருடன் மீட்கப்பட்டிருக்க மாட்டார்” என்று தெரிவித்தனர்.

4 வயதான ஹூப்பர் பெல்ஜியனில் இருந்து கொண்டுவரப்பட்டது. வனத்துறையினருக்கு உதவும் வகையில் ஹூப்பருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட புலியின் பற்கள், வால்கள்,நகங்களை ஹூப்பர் கண்டுப்பிடித்து தந்துள்ளது. வனப்பகுதியில் அனுமதியின்றி வேட்டையாடும் நபர்களையும், விலங்கினங்களை கண்டறியும் வேலையை ஹூப்பர் திறம்பட செய்து வருகிறது.