தெலங்கானாவில் ஆணவக் கொலை….கர்ப்பிணி கண் முன்னே கணவர் வெட்டிக் கொன்ற கொடூரம்

ஐதராபாத்:

தெலங்கானாவிலும் ஆணவக் கொலை ஒன்று நடநதுள்ளது. மகளை திருமணம் செய்த தலித் வாலிபரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யபப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஜோதி என்ற தனியார் மருத்துவமனையில் இருந்து இளம் தம்பதியர் பேசிக் கொண்ட நடந்து வெளியே வந்தனர். அவர்களுடன் வேறு ஒரு பெண்ணும் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் இளம் கணவரை அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். முதல் வெட்டு பட்டவுடனே சரிந்து விழுந்த அவரது தலையில் மேலும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். உடன் சென்ற மனைவியும், மற்றொரு பெண்ணும் இணைந்து இதை தடுக்க முயன்றும் பலனளிக்கவில்லை. கணவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இந்த காட்சி முழுவதும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இறந்தவர் பெயர் பிரனாம் பெருமல்லா. இவரது மனைவி அம்ருதா. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கும் அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துவிட்டு திரும்பிச் சென்ற போது இந்த கொடூரம் நடந்துள்ளது.

பிரனாய் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அம்ருதா இந்து உயர் வகுப்பை சேர்ந்தவர். இவரது கொலைக்கு அம்ருதாவின் தந்தை மாருதிராவ் தான் காரணம் என்று கூறி பிரனாய் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரியல் எஸ்டேட் அதிபரான அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

2016ம் ஆண்டு தமிழகத்தில் உடுமலைப்பேட்டையில் திருமணமான 8 மாதத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனது காதல் மனைவி கவுசல்யா முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த திருமணத்தை விரும்பாத கவுசல்யாவின் தந்தை சின்னசாமி மூளையாக செயல்பட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. சம்பவம் நடந்து 21 மாதங்கள் கழித்து சின்னிச்சாமிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது தெலங்கானாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Horrific murder in Telangana, man hacked to death in front of pregnant wife, தெலங்கானாவில் ஆணவக் கொலை....கர்ப்பணி கண் முன்னே கணவர் வெட்டிக் கொன்ற கொடூரம்
-=-