குதிரை பேரம்: 2010ல் காங்கிரஸ், தற்போது பாரதியஜனதா!

--
2010ல் பாரதியஜனதாவினர் சொகுசு ரிசார்ட்டில்

பெங்களூர்,

குஜராத்தில் போட்டியிடும் பாரதியஜனதா தேசிய தலைவர்கள் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானி ஆகியோர் வெற்றிபெற ஏதுவாக குஜராத் காங்கிரஸ் எம்எம்ஏக்களை, பாரதியஜனதா விலைபேசி வருகின்றனர்.

ஏற்கனவே இதுபோன்று கர்நாடக பாரதியஜனதா அரசை கவிழ்க்க காங்கிரசார் குதிரை பேரம் நடத்தினர். தற்போது அதேபோல் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாரதியஜனதாவினர் குதிரைபேரம் நடத்துகின்றனர்.

குஜராத்தில்  இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாரதியஜனதாவுக்கு விலை போன நிலையில், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தனது கைக்குள் வைக்க காங்கிரஸ் முடிவு செய்து, அவர்களை பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு பங்களாவில் வைக்கப்பட்டு, தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அதையடுத்து அக்டோபர் மாதம் 11ந்தேதி எடியூரப்பா சட்ட மன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

அப்போது, பாரதியஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுவிடக் கூடாது என்று கர்நாடக மாநில பாரதியஜனதா தலைவர்கள் அவர்களை, தற்போது குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது போன்று அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாரதியஜனதா எம்.எல்.ஏ.,க்களை  இழுக்கவும், தக்க வைக்கவும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் குதிரை பேரம் நடத்தப்பட்டது.

முதல்வர் எடியூரப்பா மீது அதிருப்தி அடைந்துள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்கள், பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.  இதன் காரணமாக மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் பக்கம் சாயாமல் இருக்க, அவர்களை ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

கோல்டன்  பார்ம் ரிசார்ட்டில்  பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சரிக்கட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும் பா.ஜ.,வில்  செல்வாக்குள்ள சிலர் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கினர்.

எடியூரப்பா ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற நோக்கில் காங்கிரசில்  உள்ள தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்போது அதே சூழ்நிலை குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. பாரதியஜனதாவினரின் குதிரை பேரத்துக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபோகாமல் இருக்க அவர்களை பெங்களூர் அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில், காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆக.8-ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. காங்., சார்பில் , அகமது படேல் என மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.

ராஜ்யசபா தேர்தலில் காங்., வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் தேவை. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மற்ற எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதாவுக்கு தாவாமல் இருக்க பெங்களூரு அழைத்து வரப்பட்டு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.