குதிரை பேர கட்சி!: பா.ஜ.கவை மறைமுகமாக தாக்கும் கூட்டணிக் கட்சி

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

சமீபகாலமாக பா.ஜ.க.வை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சித்துவருகிறது.

இந்த நிலையில்,  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் பாஜகவை மறைமுகமாக தாக்கி உள்ளது.

அக்கட்டுரையில், “ பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் மக்களிடையே மந்தமான சூழல் நிலவியபோது மக்களால் நிராகரிக்கப்பட்டது ஒரு கட்சி. ஆனாலும் அக்கட்சி,  கோவா மற்றும் மணிப்பூரில் ஆட்சியை பிடித்தது” என்று பாஜகவை  மறைமுகமாக விமர்சித்துள்ளது.

மேலும், “பண பலத்துடன் குதிரை பேரத்தில் ஈடுபடுவது எந்த கட்சி என மக்களுக்கு நன்றாகவே தெரியும் “ என்றும்  அக்கட்டரையில் கூறப்பட்டுள்ளது.