டில்லி:

காங்கிரஸ் எம்எல்ஏ.விடம் கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குதிரை பேரம் பேசியதாக ஒரு ஆடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதை போலி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று. இது போலியானது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.