உடல் உறுப்பு தானத்தில் மருத்துவமனைகள் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவு

சென்னை :

மிழகத்தில் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டு நடைபெற்ற அறுவை சிகிச்சைகளில் மருத்துவமனை நிர்வாகங்கள்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும், உடல் உறுப்புகளை ஏற்கனவே காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்படாமல், முறைகேடாக மருத்துவனை நிர்வாகத்திற்கு வேண்டியவர்களுக்கு பொருத்தி அதிக பணம் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் விழுப்புரம், கல்லக்குறிச்சி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.  அவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு விட்டதாக அவரது உறவினர்கள் கேரளா முதல்வரிடம் புகார் அளித்தனர்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன். தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவமனையில் விசாரணை நடத்த சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடல் உறுப்பை தானம் செய்ய மூன்று முறை மறுத்த நிலையில், உறுப்பு தேவைப்படும் நபரை பேச வைத்து தூண்டி சம்மதம் பெற்றுள்ளனர். அப்படி உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இதயம் தானம் பெறப்பட்டது. ஆனால் அதை லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படி பல நேரங்களில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சாதகமாக உடல் உறுப்பு பொருத்தப்பட்ட பலர், அந்த உறுப்பு சரியாக பொருந்தாமல் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்னவே, தமிழகத்தில் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் மோசடி நடைபெறுவதாக இந்திய சுகாதார அமைச்சகம் ஏற்னவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.