கொரோனா : மருத்துவமனை வாரியாக குணமானோர் எண்ணிக்கை

சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 662 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நேற்று வரை குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக இருந்தது.

இன்று மேலும் 27 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 662 ஆகி உள்ளது.

இது குறித்து தமிழக அரசு மருத்துவமனை வாரியாக விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 9 பேர் குணமாகி உள்ளனர்.

இதுவே இன்று அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

You may have missed