காஷ்மீர் பந்திப்போரா : பிணைக்கைதி சிறுவன் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை

ந்திப்போரா

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய படையினர் நடத்திய என்கவுண்டரில் பிணைக்கைதியான சிறுவனை கொன்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர்

காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் என்னும் ஊரில் தீவிரவாதிகள் முகாம் இட்டிருந்தனர். இந்த தகவல் அறிந்த இந்திய பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை தேடி வந்தனர். அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்த இந்தியப் படையினர் அவர்கள் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனால் தீவிர வாதிகள் சாலையில் அமர்ந்திருந்த இரு சிறுவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். பாதுகாப்பு படையினரை அங்கிருந்து செல்லுமாறு தீவிரவாதிகள் இந்த சிறுவர்களைக் காட்டி மிரட்டி உள்ளனர். அந்த சிறுவர்களுக்கு அபாயம் ஏற்படாமல் இருக்க இந்திய பாதுகாப்பு படையினர் சற்று நிதானமாக தாக்குதலை நடத்தினர்.

பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  அதை ஒட்டி பாதுகாப்பு படையினரும் சுட்டபடி முன்னேறினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் அங்கிருந்த இரு தீவிரவாதிகளும் கொல்லபட்டனர். தீவிரவாதிகள் ஒரு சிறுவனை கொன்றுள்ளனர். மற்றொரு சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த அலி மற்றும் ஹுபாய்ப் ஆவார்கள்.