ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘சதுரம் 2’ இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்துக்கு ‘ஹாஸ்டல்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘அடி கப்பியரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இதற்கு ஒளிப்பதிவாளராக பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டராக ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் அறியப்பட்ட யோகி இடம்பெற்றிருக்கிறார்.