ஓசூர் சட்டமன்றம், புதுச்சேரி நாடாளுமன்றத்துக்கும் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்ய்ம, அமமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவித்துவிட்டனர். ஒரு சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்த அமமுக கட்சி இன்று தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

அதன்படி,  ஓசூர் தொகுதி சட்டமன்ற  இடைத்தேர்தலில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல புதுச்சேரி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுவார்/

நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளராக ஞான அருள்மணிக்கு பதில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் என்று  அமமுக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.