மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு:
"நெஞ்சுவலி"யால் மரணமடைந்த கொள்ளையன்
“நெஞ்சுவலி”யால் மரணமடைந்த கொள்ளையன்
சூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் இழந்த உயிர் திரும்பிவராது என்ற நிலையில், இந்தப் பணமும் அரசின் ஆதரவும் அந்தக் காவலரின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அதே நேரத்தில், காவலர் மீதான தாக்குதலுக்குப் பிறகு காவல்நிலைய விசாரணையில் (லாக்கப்) ‘நெஞ்சுவலி’யால் இறந்துபோயிருக்கிறார் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான புஜ்ஜி(எ) மூர்த்தி. . காவல்நிலையத்தில் ‘நெஞ்சு வலி’யை எப்படி உண்டாக்குகிறார்கள்? மரணமடையும் அளவிற்கான நெஞ்சுவலியை உண்டாக்கும்அதிகாரத்தை போலீசாருக்கு யார் தந்தது? நெஞ்சு வலியை உருவாக்கியவர்களுக்கு என்ன ‘ட்ரீட்மெண்ட்’? நெஞ்சுவலியால் இறந்துபோனவருக்கு நிதி வேண்டாம். நீதியாவது கிடைக்குமா?
ஆட்சியில் யார் இருந்தாலும் காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு (அ)நீதியை நிலைநாட்டுவது வழக்கம்தான். அதில் ஜெயலலிதா எக்ஸ்பர்ட். சிதம்பரம் அண்ணாமலைநகர் பத்மினி தொடங்கி வாச்சாத்தி பெண்கள் வரை காவல்துறையால் ‘நீதி’ நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ உண்டு. இப்போது ஓசூரில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
இது பற்றிய கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகத்தான் அந்த ஒரு கோடி அறிவிப்பு.
ரேட்டை உயர்த்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.