ஓசூர் – பெங்களூரு இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்!

சேலம்: கொரோனா  அச்சம் காரணமாக  நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் தற்போது படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அதனப்டி, இன்றுமுதல் ஓசூர், பெங்களூரு பயணிகள் ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்  ரயில்சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.  அதைத்தொடர்ந்து, மத்திய, மாநிலஅரசுகள் வழங்கி வரும் தளர்வுகள் காரணமாக, பல ரயில் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. இதுவரை முழுமையான ரயில் சேவைத் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில்,  கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் – பெங்களூரு இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இது தமிழக, கர்நாடக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.