2019 ஐபிஎல் தொடர் மூலம் உலக சாதனைப் படைத்தது ஹாட்ஸ்டார்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமான ஹாட்ஸ்டார், கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியின் மூலம், உலகளவில் சாதனை செய்துள்ளது.

இந்த 2019 ஐபில் இறுதிப் போட்டியை, இத்தளத்தின் மூலம் 18.6 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர். இது ஒரு உலக சாதனை.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை, இத்தளத்தின் மூலம் 10.7 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை எங்கேயோ போய்விட்டது.

ஏற்கனவே இந்த தளம் வைத்திருந்த சாதனை அளவான 12.7 மில்லியன் பார்வையாளர்கள் என்பது, கடந்த 12ம் தேதி நடந்து சென்னை – மும்பை போட்டியின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடந்து முடிந்த 12வது ஐபிஎல் தொடரில், 300 மில்லியன் பார்வையாளர்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது ஹாட்ஸ்டார். ஆனால், அந்த இலக்கை எளிதாக கடந்ததோடு, பார்வை நேரமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 74% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.