ஓபி.எஸ் அணியின் ஆட்சி மன்ற குழு தலைவரானார் மதுசூதனன்

 

துசூதனன் – ஓ.பி.எஸ்.

சென்னை:

.தி.மு.க. ஓபி.எஸ் அணி அதிமுக புதிய ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன்

தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சசிகலா அணியின் ஆட்சி மன்றக் குழு தலைவராக சமீபத்தில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். அணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்குழு உறுப்பினர்களாக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைப்புச்செயலாளர் பொன்னையன், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆட்சிமன்றக்குழுதான், வேட்பாளர்களைத் தேரந்தெடுக்கும். ஆர்..கே. நகர் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் இரு அணிகளின் இந்த முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மேலும் ஆர்கே நகரில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.