அனைவருக்கும் வீடு: பாராளுமன்ற உரையில் குடியரசு தலைவர் தகவல்

டில்லி,

ந்த (2018) ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவரான பிறகு ஆற்றிய முதல் உரை இதுவாகும்.

உரையின்போது வரும் 2022 ம் ஆண்டுக்கள்  அனைத்து மக்களுக்கும் வீட்டுவசதி உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும்,  பிரதான மந்திரி உஜ்ஜவாலா யோஜனா திட்டத்தின்  மூலம் பெண்களுக்கு சமமான உரிமைகளை பெற சமூக நீதிக்கான இதுவரை ஏழை பெண்களுக்கு 3 கோடி 30 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது என்றும்,   கடந்த ஒரு வருடமாக சுமார் 3,50,000 சந்தேகத்திற்கிடமான நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.

2022 ம் ஆண்டுக்கள்  விவசாயிகளின் வருமானம் பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க அரசு உறுதி பூண்டுள்ளளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய  பெண்கள் கவுரவமாகவும், பயமில்லாமலும் வாழ வழி வகை செய்யும்  முத்லாக் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் கூறினார்.