சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்று அறிவித்து உள்ளத.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி மேலும் கூறி இருப்பதாவது:

சென்னையில் 1373 தெருக்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது, 1269 தெருக்களில் ஒருவரும், 74 தெருக்களில் 2 பேரும், 20 தெருக்களில் 10 பேரும், 10 தெருக்களில் 3க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 150 என்று இருந்த பாதிப்பு இப்போது 243  என்று உயர்ந்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

அந்த தெருவில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், மாஸ்க் அணியாதவர்களிம் இருந்து அபராதமும் வசூலிக்கப்படும் என்று கூறி உள்ளது.