நிஷாவின் மொக்கை காமடி குறித்து கலந்துரையாடும் ஹவுஸ்மேட்ஸ்…..!

கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டது.

வாக்குவாதம் ஆரம்பத்ததிலிருந்தே யாரும் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் இடத்தை முடிவு செய்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாலாஜி, சனம் இடையே மோதல் ஆரம்பித்தது.

இன்று 61-ம் நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், ஆரி செய்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் அனிதா மற்றும் பாலாஜி. சனம் ஷெட்டி சரியாக விளையாடவில்லை, அவருக்கு ஏன் ஆதரவு தரீங்க என்று அனிதா ஆரியிடம் கேட்கிறார். பாலா அருகில் அமர்ந்து இது நியாயமே இல்லை என்று எடுத்துரைக்கிறார்.

இந்நிலையில் அர்ச்சனா கேங் அனைவரும் சேர்ந்து அறந்தாங்கி நிஷாவை தாக்கி பேசுவது தற்போது வெளிவந்து இருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. நிஷாவின் காமெடி மோசமாக இருக்கிறது என பலரும் அடிக்கடி அவரை கிண்டல் செய்து வரும் நிலையில், அதை பற்றி தான் அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பேசி இருக்கிறார்கள்.