பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நடைபெறும் டாஸ்க்….!

பிக் பாஸ் 4ல் வீட்டுக்குள் இருப்பது 6 போட்டியாளர்கள் மட்டும் தான் என்றாலும் இதற்கு முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். முதல் நாள் அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் மட்டும் வந்த நிலையில் அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

இந்நிலையில் இன்று அனிதா சம்பத் பிக் பாஸுக்கு மீண்டும் வந்து இருக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த டாஸ்க்குகளே மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று போட்டியாளர்களுக்கு நாடா இல்லை காடா என்ற டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஜாலியாக விளையாடி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.