டில்லி

த்திய அரசு ஊழியர்களின் வீட்டு வசதிக் கடன் தொகையை ரூ.25 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதிக் கடன் தொகையாக ரூ.10 லட்சம் வரை அளித்து வந்தது.  தற்போது ஏழாம் சம்பளக் கமிஷன் அறிவிப்புக்குப் பின் கடன் தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வந்தது.  அந்தத் திட்டம் நேற்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிக் கடன் தொகை ரூ.25 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.   இந்த கடன் தொகை சுமார் ரூ. 1 கோடி வரை ஊழியர்களின் ஊதியத்தை பொறுத்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த கடன் தொகைக்காக ஏற்கனவே பெறப்பட்ட வட்டி விகிதங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது 4 அடுக்குகளாக 6% முதல் 9.5% வரை வட்டி விகிதங்கள் உள்ளன.  அவை இப்போது ஒரே விகிதமாக 8.5% என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என கூறப்படுகிறது.    அத்துடன் தற்போது கட்டுமானத்துறையில் உண்டாகியுள்ள முடக்கம் இதனால் நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.