உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள், எங்கள் கிராமத்திற்கு வரமுடியாதா? மோடிக்கு சிறுவன் கடிதம்!

புவனேஷ்வர்,

டிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான்.

ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு சிறுவன் கோரிக்கை விடுத்து உள்ளான். வயது சிறுவன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

‘கியூலெக்ஸ்’ எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும்போது ‘என்சிபாலிட்டிஸ்’ என்ற வைரஸ்  மனிதனின் உடலுக்குள்  சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனால், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுடன் இறப்பு ஏற்படுத்தும் கொடிய நோய்.

’டியர் மோடி, என்னுடைய கிராமத்திற்கு வாருங்கள், குழந்தைகள் எப்படி உயிரிழக்கின்றனர் என்பதை பாருங்கள்,’ என்று கடிதம் எழுதிஉள்ளான் 10 வயது சிறுவன் .

சிறுவனின் இந்த உருக்கமான கடிதம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ‘என்சிபாலிட்டிஸ்’ என்ற வைரஸால் ஏற்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த காய்ச்சல் பாதிப்பால் அங்கு இதுவரை 80 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்றவற்றின் மூலம் இந்த நோய் தொற்றை தெரிந்துகொள்ளலாம்.

மூளைகாய்ச்சல் நோயால் சிகிச்சை பெறும் சிறுவன்
மூளைகாய்ச்சல் நோயால் சிகிச்சை பெறும் சிறுவன்

உயிரை குடிக்கக்கூடிய இந்த வைரஸ் பன்றிகள் மற்றும் பறவைகளிடம் இருந்து தோற்றுவித்தது. இப்போது கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவி வருகிறது.

இந்த வைரசால் ஏற்படக்கூடிய மூளைக்காய்ச்சலை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. குறைந்தது  5 முதல் 15 நாட்கள் வரை  ஆகிறது. இதன் காரணமாக நோய் முற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுகிறது.

இதுகுறித்து, வருந்திய போல்கண்டா தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும்  10வயது மாணவன்  உமேஷ் மாதி,  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிஉள்ளான்.

கடிதத்தில்,  பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளான்.

”எங்களுடைய உயிரை காப்பாற்றுங்கள். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் என்னுடைய நண்பர்கள் உயிரிழந்துவிட்டனர்.

நீங்கள் உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள். எங்களுடைய கிராமத்திற்கு உங்களால் வரமுடியாதா?

என்னுடைய கிராமத்திற்கு வந்து குழந்தைகளின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும்,

என்று சிறுவன் கடிதத்தில் உருக்கத்துடன் எழுதி உள்ளான்.

சிறுவனின் உருக்கமான கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி