துருக்கி கால்பந்து கிளப் போட்டியில் சேட்டை செய்த நாய் – வைரல் வீடியோ

இஸ்தான்புல்:

துருக்கி கால்பந்து கிளப் சார்பில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியின்போது  நாய் குறுக்கேப் புகுந்து கால்பந்து விளையாடும் வீரர்களிடையே ஓடிச்சென்று ஆட்டத்தின் இடையே இடையூறு செய்த  காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லின் கரகாம்ரூக்கில் உள்ள துருக்கிய தொழில்முறை கால்பந்து கிளப்பின்  சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியின் போது, ​​ஒரு நாய் களத்தில் நுழைந்து வீரர்களி டமிருந்து கால்பந்தை தனது காலால் பிடித்து தடுத்து நிறுத்தியது. மேலும் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து ஓடியும், கால்பந்தை தனது கால்களால் பிடித்து, இடையூறு செய்தது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது….