பூகம்ப நிவாரண மருத்துவமனையில் அதானி ஆதிக்கம்

அகமதாபாத்:

கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குஜராத் மாநில பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடங்களில் குஜராத் புஜ் மாவட்ட தலைநகர அரசு மருத்துவமனையும், 200 டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர்.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 2 நாட்கள் கட்ச் பகுதியில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டார். அப்போது புதிதாக மருத்துவமனை கட்ட வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகளுடன் இந்த மருத்துவமனையை அமைக்க ரூ. 100 கோடி நிதியையும் அவர் ஒதுக்கினார். நிதி ஒரு பொருட்டு கிடையாது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அப்போதைய குஜராத் முதல்வர் சேசுபாய் படேலும் உறுதி அளித்திருந்தார்.

நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றை முன் உதாரணமாக கொண்டு அதற்கு ஏற்ற கட்டுமான தொழில்நுட்பத்துடன் 300 படுக்கை வசதி, 15 வார்டுகள், 3 ஆபரேஷன் தியேட்டர்கள், நவீன எந்திரங்களுடன் அமைக்கப்பட்டது.

பின்னர் டெல்லிக்கு வெளியே ஏய்ம்ஸ் மருத்துவமனையில் கிளைகள் 4 இடங்களில் அமைக்கப்படும் என வாஜ்பாய் தெரிவித்தார். இதில் குஜராத் கஜ் மருத்துவமனையும் எய்மஸ் ஆக மாறும் என்று கூறப்பட்டது. ஆனால் இதன் பிறகு குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றார். 2004ம் ஆண்டு வாஜ்பாய் அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனைக்கு மத்திய சுகாதார துறை மூலம் ஆண்டு பராமரிப்புக்கு ரூ. 15 கோடி வழங்கப்படும் என்று அப்போதைய இந்த துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். மாவட்ட மருத்துவமனையாக இருந்த போது ஆண்டுக்கு ரூ. 3 கோடியை அரசு செலவு செய்தது. அதன் பின்னர் மருத்துவக்கல்லூரி. நர்சிங் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பின்னர் எய்ம்ஸ் வருகை குஜராத்துக்கு கனவாகிபோனது. இந்த நிலையில் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையை 99 ஆண்டு குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழுமம் ஏற்கனவே குஜராத்தில் அதானி மருத்துவ அறிவியல் மையம் (கெய்ம்ஸ்) நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த சமயத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 2011ம் ஆண்டு குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தனியாருடன் அரசு இணைந்து செயல்படும் மருத்துவமனை என்ற அரசின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், மருத்துவமனையில் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளை தெரிவித்து பொது நல வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை தொ£டர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் 450 படுக்கை வசதிகளில் 10 சதவீதம் கட்ஜ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள பரிசோதனைக்கு ஒதுக்க வேண்டும். ஏழைகள், அரசு ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளில் சிலவற்றை கடைபிடிக்கப்படாததால், மீண்டும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும், வதோதரா மற்றும் ராஜ்காட்டில் தனக்கு ஏற்பட்ட கோர முகத்தை மறைக்க ஏய்ம்ஸ் மருத்துவமனையை அங்கு அமைக்க மோடி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். குஜராத்தில் ஏற்பட்ட முதல்வர் மாற்றம் காரணமாக இந்த மருத்துவமனை தற்போது ராஜ்காட் நகரத்தில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.