பாஜக என்றாலே, ஒரளவிற்கு அடிப்படை அரசியல் அறிவுள்ளவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவதே, இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்கள் போலியாய்  வெளியிடும் தகவல்களும், அவர்களுக்கு அவர்களே அளித்துக் கொள்ளும் பாராட்டுக்களும் தான். குஜராத் மாடல் என அவர்கள் பிரச்சாரம் செய்து மோடியை ஆட்சியில் அமர்த்தியது முதல் சமீபத்தில்,  ஐ.நா. பிரதமர் மோடியை சிறந்த பிரதமராக அறிவித்துள்ளது என அவர்கள் பரப்பிய போலித் தகவலை யாரும் மறந்திருக்க முடியாது.  பாஜகவின் மற்றொறு  மோசடியை தோலுரிக்கும் கட்டுரை இது.
ஒரு போலியான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைக் கொண்டு பாஜக உறுப்பினர் சேர்க்கை: மோசடி அம்பலம்.
Airtel-snip
புது தில்லி: 1800-103-4444. போலியான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்புக் கொண்டால் பாஜக உறுப்பினராக்கி விடும் மோசடி அம்பலமாகியுள்ளது.
ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்புக் கொள்ள தொலைபேசி எண்களைக் கூகுளில் தேடினால்,  மேற்கண்ட எண்ணைக் காண்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
“உங்கள் ஏர்டெல் போஸ்பெயிட் அல்லது ப்ரீபெய்ட் கணக்கு குறித்து பொதுத் தகவல் ” பெற கட்டணமில்லா எண் ‘1800-103-4444’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்
என்று ‘customercarenumbers.in’ தளத்தில் தொடங்கி ‘Icustomercare.in’வரை பெரும்பாலான இணையதளங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றன.
அதனை நம்பி ஒருவர் இந்தக் கட்டணமில்ல எண்ணைத் தொடர்பு கொண்டால், அது தானாய் ஒரு செயல்முறையைத் துவக்கி உங்களைப் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை
உறுப்பினராக ஆக்கிவிடும் செயலை உங்களைக் கொண்டே நிறைவேற்றிவிடும்.  நீங்கள் உறுப்பினராய்ச் சேர்ந்ததை உறுதி செய்து ஒரு குறுந்தகவலும் தங்களுக்கு வரும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியாவின் அரசியல் கட்சிகளில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும் அவர்கள் கட்சியின் ஆதரவாளர்களைக் கவரவும் அதிகளவில் நவீன தொழில்நுட்பக் (டிஜிட்டல்) கருவிகள் உள்ளன.
கடந்த ஆண்டு, பாஜக தமது கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 85 மில்லியன் என்று அறிவித்தது. அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் உள்ள சீனா 80 வருட பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையைவிட அதிக உறுப்பினர்கள் பாஜக கட்சியில் உள்ளனரா என்று வியப்படைந்த அரசியல் பார்வையாளர்கள் இதன் நம்பகத்தன்மை குறித்து  கேள்வி எழுப்பினர்.
பாஜக கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பில் மிகப்பெரிய பாய்ச்சல் இருந்தது
நவம்பர் 2014 ஆம் ஆண்டில், பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 35 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“அலைபேசி அழைப்புமூலம் கட்சியில் உறுப்பினராய் சேரும் முறை கண்டிப்பாக அரசியல் கட்சி உறுப்பினர்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்காது. மேலும், சில நேரங்களில் அரசியல் ஆதரவைத் தெரிவிக்க இது ஒரு தவறான அணுகுமுறையாகும்” என அரசியல் பார்வையாளரகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக கட்சியினர் போலி எண்கள் கொண்டு வலைத்தளங்களில் விளம்பரப் படுத்தும் பிரச்சினை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பிய கவலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அரசியல் கட்சி உறுப் பினர்கள்:
போலி ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை எப்படி தொடர்பு கொள்வதென கூகுளில் எண்கள் தேடுபவர்களை 1800-103-444 எண் கொண்ட பல வலைத்தளங்களைத் தேடலின் முடிவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான இந்த இணையத்தளங்கள் பார்ப்பதற்கு அசல் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளம் போலவே காட்சியளிக்கும்.

cc
பத்திரிக்கை.காம் கூகுளில் தேடிய போது கிடைத்த போலி எண். பல்வேறு இணையத்தளங்களில் இந்த எண் உள்ளதைக் காணலாம்.

எனவே ஒருவர் ஏமாந்து, இந்த எண்ணைத் தொடர்புக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
அந்த வலைத்தள்ங்களில் சில உண்மையான எண்களிடையே இந்தப் போலி (பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான) எண்ணையும்
பட்டியலிட்டு வைத்து ஏமாற்றுகின்றன.
பாஜகவின் இந்த முறைக்கேட்டை கண்டுபிடித்த தி வயர் பத்திரிக்கை, 1800-103-444 எண்ணைத் தொடர்புக் கொள்ள முயன்றபோது. சில ரிங்குகளுக்கு பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இணைப்பு துண்டிக்கப்பட்ட முப்பது நொடிகளில், அலைபேசிக்கு”தமிழில் “” பாஜக உறுப்பினராக ஒரு எண்ணை அழைக்க வேண்டும் என்று” குறிப்பிட்டு SAMPRK’ எனும் ஒரு எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
airtel bjp 2
முதல் குறுஞ்செய்தியில் இருந்த எண் – 1800-266-2020 – இது தான் பா.ஜ., வின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா எண். இந்த எண்ணைத் தான் பாஜக அதிகாரப்பூர்வ கட்சி  வலைத்தளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது.
airtel bjop4
இந்த எண்ணூக்கு தொடர்புக் கொண்டால் துண்டிக்கப்பட்டு உடனடியாக மற்றொரு குறுஞ்செய்தி (மேலே காட்டபட்டிருக்கும்), வந்தது. அந்த செய்தியில் “பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்கள் உறுப்பினர் எண் 1111818459. உறுப்பினர் சேர்க்கையை முடிக்கும் பொருட்டு விவரங்களை அனுப்பவும் … ”
 இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன:
முதலாவது, தமிழ்மொழி அறியாத மக்கள் முதல் எஸ்எம்எஸ்-யில் உள்ள கட்டணமில்லா எண் மற்றொரு ஏர்டெல் வாடிக்கையாளர் பாதுகாப்பு எண் என்று நம்பி ஏமாந்து  அந்த எண்ணைத் தொடர்பு கொண்டுவிட வாய்ப்புள்ளது.
இரண்டாவதாக, போலி ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுடன் பிஜேபியும் அடிப்படை உறுப்பினர் சேர்க்கை எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.
ஏனெனில்,  கட்டணமில்லா எண் அழைப்பு ‘1800-103-4444’ – – மீண்டும் அழைத்தபோது  அழைப்பு துண்டிக்கப்பட்டு வந்த குறுஞ்செய்தியில், தங்களின் “பாஜக உறுப்பினர் எண்ணிக்கை 1111818459 ” எனச் செய்தி வந்தது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், இந்த அலைப்பேசி எண் ஏற்கனவே பாஜக உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை பாஜகவின் கட்சி உறுப்பினர் சேர்க்க பயன்படுத்தப்பட்ட   மென்பொருள்  உறுதிபடுத்தவில்லை. இவ்வாறு தான், பாஜக பல கோடி வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகப் பெற்றுள்ளது.
போலியான செய்திகள் மூலம் விளம்பரம் தேடுவதில் பாஜகவிற்கு ஈடு இணை இல்லை

ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ தளங்களில் இந்தப் போலி எண்கள் இல்லை. ஆனால், தனியார் வலைத்தளங்களில் இந்தப் போலி எண்கள் உள்ளன. போலி எண்கள் மற்றும் வலைத்தளங்கள் குறித்து ஏர்டெல் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் ” எங்கள் வாடிக்கையாளர்கள், சேவைகுறித்த தகவல்களுக்கு ஏர்டெல் கடைகளை அணுக வேண்டும். அல்லது எங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த மோசடி முறையைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன.
தங்களின் கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவைக் காட்டும் முனைப்பில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் ” என்றார் பெயர் வெளியிட  விரும்பாத ஒரு  அரசியல் விமர்சகர்.
கடந்த ஆண்டு பாஜக வின் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாயதன்  உறுப்பினர் எண்ணிக்கையை மூன்று விதங்களில் அதிகரித்தது.
1. பாஜக கட்சி வலைத்தளத்தில் மக்கள் தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து ரூ 5. செலுத்தி உறுப்பினராகும் முறை.
2. பாஜக உறுப்பினர் சேர்க்கை பக்கத்தில் அலைபேசி எண்ணைப் பூர்த்தி செய்தால் உறுப்பினராகும் முறை.
3 கட்டணமில்லா எண்ணிற்கு மிஸ்ட் கால் (தவறிய அழைப்பு) கொடுத்து உறுப்பினர் ஆகும் முறை.
இதன் மூலம் 85 மில்லியன் உறுப்பினர்களைச் சேர்த்து உலகிலேயே அதிக அடிப்படை உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி எனப் பெயர் பெற்றது.
இவ்வாறு தில்லுமுல்லுகள் செய்து தமது கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது போல் காட்டுவதில் பாஜகவிற்கு ஈடு யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை பாஜக நிருபித்துள்ளது.
தற்போது, நம் முன் உள்ள கேள்வி இது தான் : போலியான எண்களைத் தரும் வலைத்தளங்களை முடக்குவது சாத்தியமா? சாத்தியம் எனில் எப்படி ? முடக்கப் போவது யார்?
 
நன்றி: தி வயர்.