கேரளா:

கேரளாவில் நடந்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையின் மூலம் தங்க கடத்தல் அம்பலமாகியுள்ளது. இது எப்படி நடந்தது என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

துபாயில் இருந்து கோழிக்கோட்டுக்கு விமானத்தில் வந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து டிரெயினில் சிலீப்பர் கோச்சில் பயணம் செய்து, திருமண விழாவில் கலந்து கொண்டதுடன், அங்கு இரண்டு எம்எல்ஏ-களுடன் கைகுலுக்கி கொண்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோழிக்கோடு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர், பல்வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்புக்குள்ளான நபர் மீது தங்கங்களை கடத்தி வந்ததாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த நபர் கேரளா வந்த எட்டு நாட்களில், ஒரு திருமண விழாவில் பங்கேற்றதுடன், இரண்டு எம் எல் ஏ-களுடன் கை குலுக்கி கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த நபரை பிடிப்பதற்காக ஏற்கனவே கசர்கோடு மாவட்ட கலெக்க்டர் சஜித் பாபு, திட்டம் வகுத்திருந்தார்.

இதுகுறித்து சஜித் பாபு தெரிவிக்கையில், அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை சொல்லவில்லை என்றாலும், அவர் பயணம் செய்தது குறித்து விபரங்களை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சேகரித்து வருகிறோம். என்றார்.

அமீர் என்ற பெயர் கொண்ட அந்த நபர் துபாய் மற்றும் பிற நகரங்களில் சில சிறிய ஜவுளி கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது பயணத்திற்காக சில நுட்பமான வழிமுறைகளை பின்பற்றியுள்ளார். இருந்தாலும் அவர் பயணிக்கும் போது, யாரைச் சந்தித்தார், எங்கு சென்றார் என்று யாரலும் சொல்ல முடியாது. கோழிக்கோட்டில் உள்ள ஹோட்டலில் அவர் சந்தித்த நபர்கள் கூட தங்கக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

காசர்கோட்டை பூர்வீகத்தை கொண்ட ஒருவர், கடத்தல் அல்லது ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆச்சரியமல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மார்ச் 11 அன்று, அமீர் வந்தபோது, ​​சுங்க அதிகாரிகள் அவரையும், அவருடன் வந்த இரண்டு பேரிடம் இருந்த லக்கேஜ்களை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்

ஆனால் அவர்கள் லக்கேஜ்களை கொண்டு வருவதற்குப் பதிலாக, மூன்று நபர்களும் தங்கள் லக்கேஜ்களுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறினர் என்று அந்த அதிகாரி கூறினார்.

இதையடுத்து காலை 10.30 மணிக்கு தங்கள் பாஸ்போர்ட்டுகளுக்காக அவர்கள் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில், அமீருக்கு, கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்தினர்.