டில்லி:

பாராளுமன்ற மக்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில்  அனில்அம்பானி நிறுவனம் சேர்க்கப் பட்டது எப்படி?  அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க கட்டாயப்படுத்தியது யார்?  என கிடுக்கிப்பிடி கேள்வி விடுத்தார்.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கியதை தொடர்ந்து நேற்று ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் பழைய ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது ஏன்  என்றும், அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தை வழங்க கட்டாயப்படுத்தியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் விலை விவரம் ரகசியம் அல்ல என, பிரான்ஸ் அதிபர் கருத்து தெரி வித்துள்ளதை சுட்டிக்காட்டு பேசிய ராகுல்,  ரஃபேல் பேரம் தொடர்பாக தான் பிரதமர் மோடி யைத்தான் குற்றம்சாட்டுகிறேன் என்றும்,  ரஃபேல் ஒப்பந்தத்தில்  பிரதமர் மோடிக்குத்தான் நேரடி தொடர்பு உள்ளது என்றும் அதிரடியாக கூறினார். ராகுல்காந்தியின் அதிரடி கிடுக்கிப்பிடி கேள்வி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ராகுல் கேள்விக்குபதில் அளிக்காமல், தனக்கு பணம் கிடைக்கவில்லை என்பதால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் நிறுத்தி விட்டதாக  குற்றம் சாட்டினார்.