ஆட்சியில் இல்லாத திமுக வாக்குறுதிகளை தர முடியுமா? – முதல்வர் கேள்வி

வேலூர்: மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக எந்த வாக்குறுதியை தரும் என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி ‍தேர்தலில் திமுக வென்றுள்ளதாகவும் பேசியுள்ளார்.

வேலூர் மக்களவை இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தின் முதலமைச்சர் ஆகவேண்டுமென்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத ஸ்டாலின் என்ன வாக்குறுதியை அளிக்கப்போகிறார்?

கடந்த தேர்தலில் போலியான வாக்குறுதிகளை கொடுத்தே திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.