அதிகரிக்கும் போலி ஐபோன்கள் – இந்தியர்களே உஷார்..!

23-1479882321-iphone-image-1சீனாவில் இருந்து போலி ஐபோன்கள் இந்தியாவிற்கு அதிகம் இறக்குமதியாகி வருகின்றது. எனவே ஐபோன் வாங்க வேண்டும் என நீண்ட நாள் கனவில் உள்ளவர்கள் போலி ஐபோனை வாங்கி பணத்தை இழந்துவிட வேண்டாம்.

போலி ஐபோன்களை கண்டறிவது சற்று சுலபம் தான். போலி ஐபோன்களில் பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ சற்று வித்தியாசமாக இருக்கும். ஒரிஜினல் ஐபோன்களில் பென்டா லோப் ஸ்குரூ பயன்படுத்தப்படும். இதை வைத்துகூட தெரிந்து கொள்ளலாம்.

ஐபோன்களில் மெமரி கார்டு வசதியே கிடையாது. மெமரி கார்டு ஆப்சன் இருந்தால் கண்டிப்பாக அது போலி தான். கேமரா குவாலிட்டி சரியில்லை என்றாலும் போலியாக இருக்க வாய்ப்பு உண்டு. மேலும், ஐபோனை ஆன் செய்யும்போது ஆப்பிள் லோகோ வரவில்லையெனில் அதுவும் போலிதான். ஆன் செய்த பின்பு ஐ ட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் கனெக்ட் ஆகவில்லை என்றால், IMEI நம்பரை கொண்டு ஆப்பிள் தளத்தில் ஒரிஜினலா என உறுதி செய்துகொள்ளவும்.

ஒரிஜினல் ஐபோன் பேக்கேஜிங் பாக்ஸ்-ல் ஐபோன் மாடல், தயாரிக்கப்பட்ட நாடு, சீரியல் நம்பர் போன்ற இடம் பெற்றிருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்கும் பாக்ஸில் இது இடம்பெறவில்லை என்றால் சுதாரித்துக்கொள்ளவும்.