உலகம் முழுவதும் விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கோரியது கூகுள்

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சை, கூகுள் டியோ மூலம் உலகம் முழுவதும் பகிர்ந்ததற்காக கூகுள் மன்னிப்பு கோரியது.


முக்கிய நிகழ்வுகளின் போது, அதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் சிறப்பு வடிவமைப்பை வெளியிடும்.
அதேபோல், கூகுள் டியோ ஆப்பிள் மூலமும் இது போன்ற சிறப்பிக்கும் நிகழ்வுகளை கூகுள் செய்து வருகிறது.

அதன்படி, கூகுள் டியோ வெளியிட்ட வீடியோவில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேச்சு இடம் பெற்றிருந்தது.

இதில், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்திய அணியை தொடர்ந்து உற்சாகப் படுத்துங்கள் என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ உலகம் முழுவதும் பகிரப்பட்டது. இந்த வீடியோ அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, விராட் கோலியின் வீடியோவை பகிர்ந்ததற்காக கூகுள் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

பார்க்க விரும்பாதவர்களுக்கு இதே போன்ற விளம்பரங்களை அனுப்பி கூகுள் மன்னிப்பு கேட்ட சம்பவங்கள் ஏற்கெனவே சில முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Google, கூகுள்
-=-