கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? சட்ட அமைச்சர் கேள்வி

டில்லி: மத்தியில் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது கார்த்தியின் சொத்து அதிகரித்தது எப்படி என்று மத்திய சட்டத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களது குரலை ஒடுக்க முடியாது என சிதம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்தியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.