சமூக சேவையாளரும், இந்தியருமான அஷ்ரப் தாமரசேரி புத்தாண்டு அன்று திருவனந்தபுரத்திற்கு விமானம் முலம் வந்திருக்கிறார். லோக கேரள சபை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிலிருந்து இரு பிரேத உடல்களையும் கொண்டுவந்திருக்கிறார்.

அஷ்ரப் அளித்த தகவலின் படி, 2019ம் ஆண்டில் மட்டும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு, 517 இறந்த நபர்களின் உடல்களை அனுப்பியிருக்கிறார். இதில் கேரளாவை சேர்ந்தவர்களின் உடல்கள் மட்டும் 300க்கும் மேலாக இருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளில் அஷ்ரப் கிட்டத்த 5,670 பிரேத உடல்களை, தங்களின் சொந்த நாடுகளுக்கு எடுத்துச்செல்ல உறவினர்களுக்கு அஷ்ரப் உதவியிருக்கிறார். இதில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர். இதற்கு எந்த கட்டணத்தையும் அஷ்ரப் வசூலிப்பது இல்லை.

கடந்த 2015ம் ஆண்டு அஷ்ரபின் சேவையை பாராட்டி, பிரவாசி பாரதிய சம்மான் விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் தமராசேரியை சேர்ந்தவரான அஷ்ரப், 43 வயதாகியும் இச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர், “ஐக்கிய அரசு நாடுகளில் இருந்து ஒரு உடலை திருப்பி அனுப்புவதற்கான செயல்முறைகள் பலருக்கும் தெரியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொழிலாளர்களின் உடல்களை அனுப்புவதற்கான செலவுகளை முதலாளிகளே ஏற்றுக்கொள்வார்கள். அச்சமயம் இறந்தவர்கள் சார்பாக ஆஜராக யாரும் இருக்கமாட்டார்கள். விசா பெற்று இங்கு வரும் நபர்கள் யாரும், விசாரணையில் ஆஜராகமாட்டார்கள். செலவை தனதாக்கிக்கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ஒரு சிலரே இருக்கிறார்கள். ஆனால் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்று, இறந்தவரின் குடும்பத்திற்கு உதவினால் மட்டுமே அவை சாத்தியமாகும். அந்த பணியை தான் நான் செய்கிறேன்.

துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் கதறுவதை கண்டேன். நான் அவரை அணுகியபோது, கொல்லத்தில் புனலூரைச் சேர்ந்த தானும், தனது தந்தையும் இங்கு வந்திருந்ததாகவும், துபாயில் தனது தந்தை இறந்துவிட்டார் என்றும் கூறியதோடு, உடலை வீட்டிற்கு அனுப்ப தேவையான செலவுகளை ஏற்க முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறினார். அத்தோடு, இந்தியாவுக்கு உடலை எடுத்துச் செல்வதற்கான முறைகள் என்னென்ன என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். எனக்கு சில திட்டங்கள் இருந்தது. யாரோ ஒருவர் நான் அவருக்கு உதவியாக இருப்பேன் என்று தெரிவித்திருந்திருக்கிறார். அவர் என்னிடம் உதவி கேட்ட உடனேயே, நானும் அதற்கு ஒப்புக்கொண்டு, அவருடன் ஒவ்வொரு அலுவலகங்களுக்கும் சென்று வந்தேன்.

இந்தியாவைத் தவிர நேபாளம், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுக்கு உடல்களை அனுப்ப நான் உதவியுள்ளேன். இதற்காக அதிக கட்டணம் வசூலிக்கும் முகவர் நிலையங்கள் உள்ளன. நான் அதை இலவசமாக செய்து வருகிறேன். செலவுகளைச் சுமக்க யாரும் இல்லை என்றால், நான் மனிதாபிமானம் கொண்டவர்கள் அல்லது வெளிநாட்டினரின் பல்வேறு அமைப்புகளின் உதவியை நாடுவேன். வடிகால் துப்புரவு வணிகம் இப்போது உறவினர்களால் நடத்தப்படுகிறது. அதேநேரம், இறந்தவர்களின் பயணத்திற்கு உதவுவதில் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்.

நான் இதில் தலையிட்டால், அதிகாரிகள் அதற்கான திட்டங்களை விரைவுப்படுத்துகிறார்கள். இங்கு வேலை செய்வோருக்கு பாதுகாப்பு இல்லை, சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் இறக்கும் இந்தியர்களில் 70 சதவீதம் பேர், 50 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் பலருக்கும் இருதய நோய் இருக்கிறது. அத்தோடு, இறப்பவர்கள் தங்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் அவர்களின் பணி தொடர்பான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.

புத்தாண்டு அன்று, அஷ்ரப் வீட்டிற்கு கொண்டு வந்த உடல்களில் ஒன்று பதானம்திட்டாவைச் சேர்ந்த ரென்னி தாமஸ் உடலாகும். இது தொடர்பாக பேசிய ரென்னியின் சகோதரர் லெஸ்லி, “ரென்னி இறந்தபோது, உடலைக் கொண்டு வர யாரையாவது அனுப்ப திட்டமிட்டிருந்தோம். பல ஏஜென்சிகள் எங்களிடம் இருந்து பணத்தை சுரண்ட முயற்சித்தன. ஒரு உறவினர் அஷ்ரப் பற்றி எங்களிடம் சொன்னார், அவர் ஒரு தொலைபேசி அழைப்பில் எங்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார். அஷ்ரப் தெய்வ பக்தி கொண்டவர். எதையும் வசூலிக்காமல் உடலை மீண்டும் கொண்டு வந்தார்” என்று தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி இறந்தபோது அஷ்ரபிடம் தான் அவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அஷ்ரப் மூலமே ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.