டில்லி

வேளாண் சட்டங்களை நீக்கப் போராடி வரும் விவசாயிகளில் இன்னும் எத்தனை பேர் பலி ஆக வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு  கிளம்பி உள்ளது.  இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை சுமார் 11 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர்.

இந்த செய்தி நாடெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.   ஆயினும் மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவதில்லை எனப் பிடிவாதமாக உள்ளது.  இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இந்த வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற இன்னும் எத்தனை விவசாயிகள் பலி ஆக வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “கடந்த 17 நாட்களில் 11 விவசாய சகோதரர்கள் உயிர்த் தியாகம் செய்தும் மோடி அரசு பின் வாங்கவில்லை.  இன்னும் பாஜகவினர் தங்களுக்குப் பணம் தருவோருடன் உள்ளனரே தவிர உணவு அளிப்போருடன் நிற்கவில்லை.   இதுதான் ராஜ தர்மமா?” எனக் கேள்வி கேட்டுள்ளார்.