சென்னை:

திகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக எத்தனை காவலர்கள் பணிபுரிகின்றனர் என்ற விவரத்தை இன்றைக்குள் அனுப்பி வைக்கும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கம் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டர்லி முறை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில்,  கடந்த 10 ஆண்டுகளில் ஆர்டர்லி பணியில் இருந்த எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்,  எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர்  என டிஜிபி அறிக்கை கேட்டுள்ளார்.

முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் இப்போது எத்தனை பேர் பணியில் உள்ளனர்..?

கடந்த 10 வருடங்களில் ஆர்ட்லி பணியில் இருந்தோர் எத்தனை பேர் உயிர் இழந்து உள்ளனர்…?

எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்…?

இன்றளவில் யார் யார் எந்த அதிகாரிகள் வீடுகளில் பணி செய்கின்றனர்

என்ற  விவரங்களையும் அனுப்ப உயரதிகாரி களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இன்று  மாலை 5 மணிக்குள் அனைத்து தகவலும் வந்துசேர வேண்டும் என்றும்  டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.

குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு, ரயில்வே தொடர்பான அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்டலிங் முறை ரத்து தொடர்பான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் டிஜிபி கேள்வி எழுப்பியுள்ளார்.