மதுரை:

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள  மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில், வரும்  2020-ம் ஆண்டுக்கள் தமிழகத்தில் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில்  மதுக்கடைகளை முழுமையாக மூட உத்தரவிட  கோரி காந்திராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வு விசாரித்து வருகிறது.  வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து, தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? என கேள்வி எழுப்பினர்.

மேலும் நாள் ஒன்றுக்கு  எவ்வளவு மதுபானம், எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது? என்றும் எவ்வளவு மதுபானம் டாஸ்மாக்கிற்கு வினியோகம் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

வழக்கில் தமிழகஅரசு உடனடியாக பதில்தர உயர்நிதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. என்பவரின் மனுவுக்கு ஒருவாரத்தில் பதில் தரஉத்தரவிட்டனர்.