மதத்தின் பெயரில் இன்னும் எத்தனை தந்தைகள் உயிரிழக்க நேரிடும்: பசு காவலர்களால் கொல்லப்பட்ட சுபோத்சிங்கின் மகன் கேள்வி

லக்னோ:

தத்தின் பெயரால் இன்னும் எத்தனை தந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று என்று பசு பாது காவலர்களால் கொல்லப்பட்ட சுபோத்குமார் சிங்கின் மகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அபிஷேக் (சுபோர்குமார் மகன்)

பிரபலமான அக்லாக் மரணம் குறித்த வழக்கை விசாரித்து வருபவர் காவல்ஆய்வாளர் சுபோர்குமார் சிங். இவர் நேற்று புலந்த்சாகர் அருகே உள்ள வயல் ஒன்றில் இறந்து கிடந்த பசு மாடு தொடர்பாக எழுந்த பிரச்சினை காரணமாக காவலர்கள் மூலம்  அவர்களை சமாதானப் படுத்த முயற்சி மேற்கொண்டார்.

ஆனால், பசு பாதுகாவலர்கள்  போலீஸார் மீது தாக்குதல் நடத்தியும், போலீஸ் நிலையத்தையும் வாகனத்தையும் தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறை இன்ஸ் பெக்டர் சுபோர்குமார் சிங் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். இதில் இளைஞர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுபோத்குமார் சாவுக்கு காவல்துறையின் சதி என்றே அவரது சகோதரி குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில், அவரது மகன் அபிஷேக், மதத்தின் பெயரால் இன்னும் எத்தனை தந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று  கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், தனது தந்தை   மதத்தின் பெயரில்  சமூகத்தில் வன்முறையை தூண்டாத ஒரு நல்ல குடிமகனாக இருக்க விரும்பினார் என்ற அபிஷேக், இன்று என் தந்தை இந்த இந்து-முஸ்லிம் சர்ச்சை காரணமாக  தனது உயிரை இழந்துவிட்டார், நாளை இதுபோலயயாருடைய தந்தை தன் வாழ்க்கையை இழந்துவிடுவார்? என்று சோகமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒரு எஃப்.ஐ.ஆர்.ஏ., கால்நடைகள் மீது கொலை செய்யப்பட்டதாகக் கூறியும்,, அடுத்தது,  வன்முறை எதிர்ப்புக்களுக்கு எதிரானதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் 4 பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.