சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, குறைந்த பட்சம் 25 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுவரை 4 முறை அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா  தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. பாஜக தரப்பில் 40 தொகுதிகள் கோரப்பட்டதாகவும், குறைந்த பட்சம் 25 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் பாஜக போட்டியிட விரும்பும் 40 தொகுதிகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் உள்ள அதிமுக, இன்று அதிமுக தரப்பில் இருந்து முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள 40 தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலத்தில்  சில தொகுதிகள், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சில தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதிகள் அனைத்தும், ஏற்கனவே அதிமுக வெற்றிவாகை சூடிய தொகுதிகள். அதனால்,அந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்க அதிமுக தயங்கி வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.

பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் விவரம்

  1. ராசிபுரம் தொகுதி – மாநில பா.ஜனதா தலைவர் எல்.முருகன்
  2. கோவை தெற்கு தொகுதி –  வானதி சீனிவாசன்
  3.  கிணத்துக்கடவு தொகுதி – அண்ணாமலை
  4. சேப்பாக்கம் தொகுதி – குஷ்பு
  5. தி.நகர் தொகுதி – எச்.ராஜா
  6. துறைமுகம் தொகுதி
  7.  கொளத்தூர் தொகுதி,
  8. வேளச்சேரி தொகுதி
  9. ஆலந்தூர் தொகுதி,
  10. தாம்பரம் தொகுதி,
  11. மாதவரம் தொகுதி,
  12. செங்கல்பட்டு தொகுதி
  13. பழனி தொகுதி ,
  14. திருத்தணி தொகுதி ,
  15. மேலூர் தொகுதி ,
  16. திருச்செந்தூர் தொகுதி
  17. ராசிபுரம் தொகுதி,
  18. திருப்பூர் வடக்கு தொகுதி,
  19. அரவக்குறிச்சி தொகுதி,
  20. கோவை தெற்கு தொகுதி,
  21. சேலம் மேற்கு தொகுதி,
  22. மொடக்குறிச்சி
  23. கே.வி.குப்பம்,
  24. திருவண்ணாமலை,
  25. திருச்சி கிழக்கு,
  26. பூம்புகார்,
  27. புவனகிரி,
  28. ஓசூர், ஜெயங்கொண்டம்,
  29. மயிலம்,
  30. திருவையாறு,
  31. தஞ்சாவூர்,
  32. கந்தர்வகோட்டை,
  33. சிவகங்கை,
  34. பரமக்குடி,
  35. மதுரை கிழக்கு,
  36. சாத்தூர்,
  37. தூத்துக்குடி,
  38. கன்னியாகுமரி,
  39. குளச்சல்,
  40. நாகர்கோவில்

இவை மட்டுமின்றி முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை தொகுதியை பா.ஜனதா கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தலைமை பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க மறுத்து வருகிறது. பாஜகவுடன்ன பேச்சுவார்த்தை வரும  7-ந்தேதி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு,  ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.