சென்னை:

டந்த 6ந்தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தமிழத்தில் இருந்து நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி சிபிஎஸ்சி வஞ்சனை செய்திருந்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் நிலவியது. மேலும், நீட் தேர்வுக்கு எழுத வெளிமாநிலம் சென்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் 3 பேர் மனஅழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பில்  பரிதாபமாக மரணம் அடைந்தனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் அரசியல்கட்சியினரின்  போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்கள் சிரமத்துக்குள்ளாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெவித்து உள்ளது.

அதில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 24 ஆயிரத்து 720 மாணவ, மாணவிகள் தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதியதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.