தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம் எத்தனை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை:

மிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அநாதை இல்லங்கள் எத்தனை உள்ளன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வழக்கின் விசாரணையை வரும் 25ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிர்மல்குமார் என்பவர் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம் குறித்து பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில்,   தமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதேபோல், பதிவு செய்யப்படாத காப்பகங்களும் அதிகரித்துள்ளன. இதனால் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதை தடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின்போது, சென்னையில் உள்ள குழந்தைகள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 4 ஆயிரத்து 824 பேர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 460 பேர் தற்போது  தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 672 முன்ஜாமின் பெற்றுள்ளதாகவும், 4 ஆயிரத்து 804 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக என்றும், தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் காப்பகம்  மற்றும் அநாதை இல்லங்கள் எத்தனை உள்ளன அதில், எத்தனை பதிவு செய்யபடாமல் செயல்பட்டு வருகிறது  என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை அக்டோபர் 25ம் தேதிக்கு நீதிபதிகள்  ஒத்தி வைத்தனர்.