சென்னை:

மிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 88 ஆயிரத்து 673.

மொத்த வாக்காளர்கள்: 38.88,673

ஆண் வாக்காளர்கள் : 19,15,718

பெண் வாக்காளர்கள் : 19,71,966

மூன்றாம் பாலினத்தவர்: 989

புதிய வாக்காளர்கள் : 32,362

பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 9, 745

சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக வேளச்சேரி உள்ளது. இங்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்:-

ஆண்கள்-120383, பெண்கள்-129038, இதர வாக்காளர்கள்-104, மொத்தம்-249525.

பெரம்பூர்:

ஆண்கள்- 145606, பெண்கள்- 149562, இதர வாக்காளர்கள்-63, மொத்தம்-295231.

கொளத்தூர்:

ஆண்கள்-132209, பெண்கள்-137169, இதர வாக்காளர்கள்- 65, மொத்தம்- 269443

வில்லிவாக்கம்:

ஆண்கள்-122380, பெண்கள்- 126760, இதர வாக்காளர்கள்- 60, மொத்தம்-249200

திரு.வி.க.நகர்:

ஆண்கள்- 102253, பெண்கள்-108229, இதர வாக்காளர்கள்-49, மொத்தம்-210531.

எழும்பூர்:

ஆண்கள்- 90278, பெண்கள்-91821, இதர வாக்காளர்கள்-49, மொத்தம்-182148.

ராயபுரம்:

ஆண்கள்- 88211, பெண்கள்-91617, இதர வாக்காளர்கள்-47, மொத்தம்-179875.

துறைமுகம்:

ஆண்கள்- 88483, பெண்கள்-81087, இதர வாக்காளர்கள்-50 169620.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி:

ஆண்கள்-111482, பெண்கள்-115592, இதர வாக்காளர்கள்-28, மொத்தம்-227102

ஆயிரம் விளக்கு:

ஆண்கள்-115297, பெண்கள்-120178, இதர வாக்காளர் கள்-85, மொத்தம்-235560

அண்ணாநகர்:

ஆண்கள்-135470, பெண்கள்-139862, இதர வாக்காளர்கள்-79, மொத்தம்-275411

விருகம்பாக்கம்:

ஆண்கள்-137958, பெண்கள்-138177, இதர வாக்காளர்கள்-82, மொத்தம்-276217

சைதாப்பேட்டை:

ஆண்கள்-133413, பெண்கள்-137851, இதர வாக்காளர்கள்-71, மொத்தம்-271335

தியாகராய நகர்:

ஆண்கள்-115248, பெண்கள்-117915, இதர வாக்காளர்கள்-39, மொத்தம்-233202

மயிலாப்பூர்:

ஆண்கள்-126490, பெண்கள்-133838, இதர வாக்காளர்கள்-36, மொத்தம்-260364

வேளச்சேரி:

ஆண்கள்-150557, பெண்கள்-153270, இதர வாக்காளர்கள்-82, மொத்தம்-303909.

ந்த வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 10 மற்றும் 13 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? அல்லது இல்லையா? என்பது குறித்து சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2020 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (01.01.2002-ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6-யை பூர்த்திசெய்து கொமுடுக்கலாம்

பெயர்கள் நீக்கம் செய்பவர்கள்  படிவம் 7-யை பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும்.

வாக்காளர்  பட்டியலில் திருத்தம் செய்வோர் படிவம் 8-யை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஒஅ சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் ‘8-ஏ’ யினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அத்துடன்,  அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் வழங்க வேண்டும.

இந்த விண்ணப்பங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 23.12.2019 முதல் 22.01.2020 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

04.01.2020, 05.01.2020, 11.01.2020 மற்றும் 12.01.2020 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை அளிக்கவும், இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.