குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், பல தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் இருந்ததாக புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து பிரியங்கா காந்தியும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோத்ரா தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்குகளோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

பதிவான வாக்குகளைவிட, அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?

அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா?” என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.