புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்காக, பாரதீய ஜனதா சார்பில் ரூ.1.4 கோடி, இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திரமோடி பதவியேற்ற நாள்முதல், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான விபரங்களின்படி இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில், ஒவ்வொரு அதிகாரப்பூர்வமற்ற பயணத்திற்கும் எந்தவகையான விமானம் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலோ, எந்தவகையான பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது மற்றும் பயண நேரங்களின் அளவு ஆகிய தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம், பயணம் செய்த வழித்தடம் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வமற்ற பயணத்திற்கும் வசூலிக்கப்பட்ட கட்டணம் ஆகியவை குறித்த விபரங்கள் மட்டுமே, மேலெழுந்த வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.